முக்கிய செய்திகள் லண்டனில் பொலிஸ் அதிகாரி  ஒருவர் மீது கத்திக் குத்து!

லண்டனில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கத்திக் குத்து!

கிழக்கு லண்டனில் உள்ள புகையிரத நிலையம் ஒன்றுக்கு வெளியே வைத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். சந்தேக நபர் இல்போர்ட் புகையிரத நிலையத்துக்கு வெளியே குறித்த ஆண் பொலிஸாரை நெருங்கி அவரை கத்தியால் குத்தியுள்ளார் என்று பிரித்தானிய போக்குவரத்துத்துறை பொலிஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று பிரித்தானிய போக்குவரத்துத்துறை பொலிஸ் தெரிவித்துள்ளது. ...